சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு

ராமநாதபுரத்தில் நடைபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வில் 5 ஆயிரத்து 105 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். ஆயிரத்து 125 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Update: 2023-08-26 18:45 GMT

ராமநாதபுரத்தில் நடைபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வில் 5 ஆயிரத்து 105 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். ஆயிரத்து 125 பேர் தேர்வு எழுத வரவில்லை.

எழுத்து தேர்வு

தமிழகத்தில் காவல் மற்றும் தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 621 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் மற்றும் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் பணியிடங்கள் என மொத்தம் 749 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வினை சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது. இந்த பணிகளுக்கான தேர்வுகள் நேற்று மாநிலம் முழுவதும் நடைபெற்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாவட்டத்தில் மேற்கண்ட தேர்வினை எழுத 6 ஆயிரத்து 230 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான தேர்வுகள் 6 தேர்வு மையங்களில் காலை 10 மணி முதல் 12.30 மணி வரை எழுத்து தேர்வும், 3.30 முதல் 5.10 வரை தமிழ் தகுதி தேர்வும் நடைபெற்றது.

பரமக்குடி கே.ஜே.எம். மேல்நிலைப்பள்ளி, பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரத்தில் வேலுமாணிக்கம் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செய்யதம்மாள் கலை அறிவியல் கல்லூரி, செய்யதம்மாள் மேல்நிலைப்பள்ளி, செய்யதம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் நடைபெற்றன.

டி.ஐ.ஜி. ஆய்வு

இந்த தேர்வுகளை எழுத மொத்தம் 4 ஆயிரத்து 114 ஆண்கள், 921 பெண்கள் உள்பட 5 ஆயிரத்து 35 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் 3 ஆயிரத்து 482 ஆண்கள், 723 பெண்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 205 பேர் மட்டுமே கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 632 ஆண்கள், 198 பெண்கள் என 830 பேர் தேர்வு எழுத வரவில்லை.

பிற்பகலில் பொதுபிரிவினர் மற்றும் காவல்துறை பிரிவினருக்காக நடைபெற்ற தமிழ் தகுதி தேர்வில் மொத்தம் 6 ஆயிரத்து 230 பேரில் 5 ஆயிரத்து 105 பேர் தேர்வு எழுதினர். ஆயிரத்து 125 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தேர்வர்கள் பலத்த சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர். ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தேர்வை கண்காணித்தார். ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.துரை நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

Tags:    

மேலும் செய்திகள்