வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு
திருப்பத்தூர் மாவட்டத்தில் வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வை 651 பேர் எழுதினர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு திருப்பத்தூர் மேரி இமாகுலேட் பள்ளி, தோமினிக் சேவியோ பள்ளி ஆகிய 2 பள்ளிகளில் நடந்தது. தேர்வுக்கு 743 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தேர்வு எழுத ஆர்வமுடன் வந்தவர்களை தீவிர சோதனைக்கு பிறகே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இதில் 651 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 92 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.
மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தேர்வு மையங்களுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிசுப்ராயன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.