மாவட்ட அளவிலான கலைத்திருவிழாவுக்கு தேர்வு

காளசமுத்திரம் பள்ளி மாணவிகள் மாவட்ட அளவிலான கலைத்திருவிழாவுக்கு தேர்வு ெபற்றனர்.

Update: 2023-10-25 18:45 GMT

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அடுத்த காளசமுத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் வட்டார அளவில் கலைத் திருவிழா நடைபெற்றது.

இதில் தேர்வான மாணவிகள் நாளை (வெள்ளிக்கிழமை) திருவண்ணாமலையில் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் கலந்து கொள்ள தேர்வாகினர்.

இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவிகளுக்கு கரகாட்டம், பாவனை நடிப்பு, மணல் சிற்பம் உள்பட பிற மாநில நடனங்களிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட அளவில் நடைபெறும் கலைத்திருவிழாவில் மாணவிகள் வெற்றி பெற்று, மாநில அளவில் நடைபெறும் கலைத்திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று தலைமை ஆசிரியர் அருளரசு, ஆசிரியர்கள் ஆனந்தன், கீதா, கயல்விழி, பயிற்சி ஆசிரியர் ஜீவா உதவியாளர் சீனுவாசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

Tags:    

மேலும் செய்திகள்