ஜூனியர் ஆக்கி போட்டிக்கு வீரர்கள் தேர்வு

ஜூனியர் ஆக்கி போட்டிக்கு வீரர்கள் தேர்வு 6-ந் தேதி நடக்கிறது

Update: 2023-05-03 18:45 GMT

சிவகங்கை

சிவகங்கை ஆக்கி கிளப்பின் செயலாளர் தியாக பூமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;- மாவட்டங்களுக்கு இடையிலான ஜூனியர் ஆக்கி போட்டிகள் தூத்துக்குடி மற்றும் தேனியில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் சிவகங்கை மாவட்ட அணிக்கு வீரர்கள் தேர்வு வருகிற 6-ந் தேதி சிவகங்கையில் உள்ள மாவட்ட திறந்த வெளி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.

எனவே இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவை கொண்டு வர வேண்டும். 1-1-2004-க்கு பின்பு பிறந்தவர்கள் மட்டும் இந்த போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்