திறனாய்வு தேர்வை 4,663 மாணவர்கள் எழுதினர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 17 மையங்களில் திறனாய்வு தேர்வை 4,663 மாணவர்கள் எழுதினர்.

Update: 2022-12-17 18:45 GMT

அரசு, அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு எழுதுபவர்களில், தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மேல்படிப்பு உதவித்தொகையாக ஆண்டுதோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 50 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்படுவர்.

அதன்படி, இவ்வாண்டிற்கான தேர்வு நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 17 மையங்களில் நடந்தது. இந்த தேர்வை எழுத 4,826 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 173 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. 4,663 பேர் தேர்வு எழுதினர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமையில் குழுவினர் தேர்வு மையங்களில் அலுவலர்கள் கண்காணித்தனர். கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை முதன்மை கண்காணிப்பாளர் ரோகிணி பார்வையிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்