ரூ.1 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீர் பறிமுதல்

வேதாரண்யம் அருகே விற்பனை செய்ய கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீரை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 6 பேரை கைது செய்தனர்.

Update: 2022-07-09 18:52 GMT

வேதாரண்யம்

வேதாரண்யம் அருகே விற்பனை செய்ய கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீரை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 6 பேரை கைது செய்தனர்.


ரகசிய தகவல்

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் இருந்து அம்பர் கிரிஸ் திமிங்கலத்தின் உமிழ்நீர்(அம்பர் கிரிஸ்) கடத்தி செல்லப்படுவதாக தஞ்சை நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான், நாகை வனத்துறை அலுவலர் ஆதிலிங்கம், கோடியக்காடு வனவர்கள் பெரியசாமி. சதீஷ்குமார் மற்றும் தஞ்சை நுண்ணறிவு பிரிவு போலீஸ் ஏட்டுகள் கண்ணன், சரவணன் ஆகியோர் வேதாரண்யத்தை அடுத்த செம்போடை புஷ்பவனம் பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

:ரூ.1 கோடி திமிங்கலத்தின் உமிழ்நீர்

அப்போது அந்த வழியாக சந்தேகம்படும் வகையில் 4 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் வந்தனர். அவர்களை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் ரூ.1 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீர் இருந்தது தெரிய வந்தது.

6 பேர் கைது

இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த ஆண்டவர் (வயது41), சிவலிங்கம் (47), பெரிய குத்தகையை சேர்ந்த மணிவாசகன் (41), நாகையைச் சேர்ந்த இளையராஜா (37), ஓம் பிரகாஷ் (51), திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த சரவணன் (44) என்பதும், இவர்கள் திமிங்கலத்தின் உமிழ்நீரை கடத்தி வந்து விற்பனை செய்ய சென்றதும் தெரிய வந்தது.இதுகுறித்து கோடியக்கரை வனத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான 3¾ கிலோ திமிங்கலத்தின் உமிழ்நீரையும், கடத்தலுக்கு பயன்படுத்திய 4 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்