மணல் கடத்திய லாரி பறிமுதல்
ராஜபாளையம் அருகே மணல் கடத்திய லாரிைய போலீசார் பறிமுதல் செய்தனர்.;
ராஜபாளையம்
ராஜபாளையம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன் மற்றும் போலீசார் ஆவரம்பட்டி, அழகுதேவன்குளம் ஆகிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.