அதிக மாடுகள் ஏற்றிய லாரி பறிமுதல்; டிரைவர் கைது

திருமங்கலம் அருகே அதிக மாடுகள் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-08-14 19:33 GMT

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே அதிக மாடுகள் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

லாரியை மடக்கினர்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து லாரியில் 43 மாடுகளை ஏற்றிகொண்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சொரிக்காம்பட்டிக்கு லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு வந்தது. ஒரே லாரியில் இடைவெளியின்றி ஏராளமான மாடுகள் ஏற்றி வருவதாக விருதுநகர் மாவட்ட பிராணிகள் நலவாரிய அமைப்பான பிப்பீள் பார் அனிமல்ஸ் அமைப்பின் செயலர் சுனிதா கிறிஸ்டிக்கு தகவல் வந்தது. இதை தொடர்ந்து திருமங்கலம் நோக்கி வந்த அவர் நேற்று இரவு கப்பலூர் மேம்பாலத்தில் மாடுகளுடன் வந்த லாரியை மடக்கி பிடித்தார்.

இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லாரியை மாடுகளுடன் பறிமுதல் செய்தனர்.

டிரைவர் கைது

லாரியில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் கடையநல்லூர் மேலதிருவேட்டையை சேர்ந்த லாரி உரிமையாளர் மனோகரன், டிரைவர் முத்துபாண்டி (32) என்பது தெரியவந்தது. சுனிதா கொடுத்த புகாரில் போதுமான இடைவெளியின்றி மாடுகளை அடைத்து கொண்டும், போதுமான உணவு, தண்ணீர் கொடுக்காமல் நீண்டதூரம் லாரியில் நிற்கவைத்து கொண்டுவந்ததாக வழக்குபதிவு செய்து டிரைவர் முத்துபாண்டியை கைதுசெய்தனர். 43 மாடுகளை விருதுநகரில் உள்ள கோசாலைக்கு அனுப்பிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்