கூழாங்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்; டிரைவர் கைது

கூழாங்கற்கள் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டு, டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-01 17:46 GMT

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன் மற்றும் திருமானூர் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை மறித்து சோதனை செய்தபோது, அந்த லாரியில் சுமார் 2 யூனிட் கூழாங்கற்கள் அரசு அனுமதியின்றி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார், லாரியை ஓட்டி வந்த டிரைவர் அரியலூர் மாவட்டம் நாயக்கர் பாளையம் கிராமத்தை சேர்ந்த செந்தில்வேல்(வயது 40) மற்றும் லாரியின் உரிமையாளரான கோவிலூர் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, டிரைவர் செந்தில்வேலை கைது செய்தனர். பின்னர் அவரை அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வேல்முருகனை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் வேல்முருகன் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருமானூர் ஒன்றிய பொறுப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்