மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்; உரிமையாளர் மீது வழக்கு

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;

Update: 2023-03-27 19:19 GMT

அரிமளம்:

அரிமளம் ஒன்றியம் ஏம்பலை அடுத்துள்ள கரம்பவயல் விலக்கு ரோடு அருகே ஏம்பல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தார். இதில் அந்த டிராக்டரில் அனுமதியின்றி சுமார் ஒரு யூனிட் மணல் ஏற்றிச்செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரின் உரிமையாளர் கரம்பவயலை சேர்ந்த தங்கராசு மீது போலீசார் வழக்குப்பதிந்து, கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டருடன் மணலை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்