மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
ஆரணி அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்..;
ஆரணி
ஆரணியை அடுத்த மேல்சீசமங்கலம் ஆற்றுப்படுகைப் பகுதியில் இன்று அதிகாலை செய்யாறு தாலுகா மண்டல துணைத் தாசில்தார் மேனகா மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக ஒரு டிராக்டர் மணல் ஏற்றி வந்தது. அதிகாரிகளை கண்டதும் டிராக்டரை நடு ரோட்டிலேயே விட்டு விட்டு டிரைவர் தப்பியோடி விட்டார்.
வருவாயத்துறையினர் டிராக்டரை பறிமுதல் செய்து ஆரணி தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.
மண்டல துணைத் தாசில்தார் மேனகா கொடுத்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் வழக்குப்பதிவு செய்து மணல் கடத்திய டிராக்டர் யாருடையது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
தப்பியோடிய டிரைவரை வலை வீசி தேடி வருகிறார்.