மளிகைக்கடையில் புகையிலை பொருட்கள் பறிமுதல்

மளிகைக்கடையில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-07-06 19:00 GMT

திருக்கோவிலூர், 

அரகண்டநல்லூர் அருகே கொடுக்கப்பட்டு கிராமத்தில் உள்ள ஏழுமலை என்பவரின் மளிகைக்கடையில் அரகண்டநல்லூர் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஒரு மூட்டை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து புகையிலை பொருட்களை கடத்தி வந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக கொடுக்கப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (வயது 45), டி.அத்திப்பாக்கம் வெள்ளத்துரை (38), பாண்டியன் (27) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்