ரூ.3 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்-ஒருவர் கைது
சிவகங்கை அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
சிவகங்கை அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
போலீசார் ரோந்து
சிவகங்கை நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகபிரியா மற்றும் போலீசார் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நகர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் சுற்றி திரிந்தார். அவரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர் கொடுத்த தகவலின் பேரில் வாணியங்குடியில் கிருஷ்ண ஜெகன் (வயது26) என்பவரது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்தது.
சிவகங்கை அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
இதையடுத்து நகர் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி மற்றும் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது கிருஷ்ண ஜெகன் வீட்டில் 8 மூடைகளில் ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான 6,400 புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ண ஜெகனை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ராஜேஸ் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.