புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது
பாவூர்சத்திரத்தில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடம் அருகே 2 பேர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
அதில் ஒருவர் சுரண்டை அருகே உள்ள மரியதாய்புரம் பகுதியைச் சேர்ந்த மிக்கேல்சவரிமுத்து (வயது 34) என்பதும், இவர் தற்போது அம்பை அருகே உள்ள அடையகருங்குளம் பகுதியில் வசித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது. மற்றொரு நபர் பெத்தநாடார்பட்டி பகுதியைச் சேர்ந்த காண்டீபன் (58) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 2 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார், 2 பேரையும் கைது செய்து, மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.