சரள் மண் ஏற்றி வந்த லாரி பறிமுதல்; டிரைவர் கைது

சரள் மண் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-21 19:20 GMT

வடக்கன்குளம்:

பழவூர் அருகே அம்பலவாணபுரம் விலக்கில், பழவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில், தனக்கர்குளத்தில் இருந்து சரள் மண்ணை லாரியில் ஏற்றி வந்ததும், அதிக பாரத்துடன் ஏற்றி வந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்த பணகுடி அருகே சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த பால்துரை (வயது 50) என்பவரை கைது செய்தனர். மேலும் லாரியை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்