குழித்துறை:
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட முழங்குழி மேலன்விளை பகுதியில் அனுமதியின்றி பாறைகளை உடைத்து டெம்போவில் கடத்திச் செல்வதாக நல்லூர் கிராம நிர்வாக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். அவரை கண்டதும் பாறைகற்கள் ஏற்றிய டெம்போவை டிரைவர் அங்கேயே விட்டு விட்டு தப்பியோடி விட்டார்.
இதுகுறித்து நல்லூர் கிராம நிர்வாக அலுவலர் செலஸ்டின் ராஜ் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.