உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே 3 ஓட்டல்களில் கெட்டுப்போன பொருட்கள் பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறையினர் நடவடிக்கை

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள 3 ஓட்டல்களில் கெட்டுப்போன பொருட்களை உணவு பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்து, அழித்தனர்.

Update: 2022-06-29 17:10 GMT

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடி அருகே உள்ள ஒரு சில ஓட்டல்களில் கெட்டுப்போன உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறையினருக்கு புகார் சென்றது. அதன்அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் இளங்கோவன் தலைமையிலான உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி பகுதியில் சாலையோரம் உள்ள ஓட்டல்கள், பலகார கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள 3 ஓட்டல்களில் கெட்டுப்போன நூடுல்ஸ், வடித்து வைத்த 5 கிலோ சாதம், காலாவதியான மிக்சர் பாக்கெட்டுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அதிகாரிகள் கெட்டுப்போன உணவு பொருட்களை பறிமுதல் செய்து, தரையில் பள்ளம் தோண்டி புதைத்தனர். அதைத்தொடா்ந்து 3 ஓட்டல் நிர்வாகிகளிடம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியதோடு, இனிவரும் நாட்களில் இதுபோன்று கெட்டுப்போன உணவு பொருட்களை விற்பனை செய்வது தெரிய வந்தால் ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துச்சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்