கெட்டுப்போன கோழி இறைச்சி பறிமுதல்
வந்தவாசியில் கெட்டுப்போன கோழி இறைச்சி பறிமுதல்
வந்தவாசி
வந்தவாசி காதர்ஜண்டா தெருவில் உள்ள சிக்கன் பக்கோடா கடை ஒன்றில் சிக்கன் பக்கோடா வாங்கி சாப்பிட்ட மருத்துவர் ஒருவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்தன் தலைமையிலான சுகாதாரத்துறையினர் அந்த தெருவில் உள்ள கோழி இறைச்சி விற்பனை மற்றும் சிக்கன் பக்கோடா கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
இதில் தனியார் மருத்துவமனை எதிரில் உள்ள சிக்கன் பக்கோடா கடை ஒன்றில் சுமார் 20 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கெட்டுப்போன கோழி இறைச்சியை சுகாதாரத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடைக்கு நோட்டீஸ் வழங்கி விசாரணை நடத்தி வருகின்றனர்.