காருடன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

வாணியம்பாடி அருகே காருடன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.;

Update: 2022-06-11 18:02 GMT

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள சொரக்காயல்நத்தம் கிராமத்தில் சிவா என்பவரின் விவசாய நிலத்தில் ஒரு கார் வெகுநேரமாக நிற்பதாக வாணியம்பாடி டவுன் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

அதன்ேபரில் திம்மாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காரை சோதனை செய்தனர். அதில் செம்மரக்கட்டைகள் இருந்தது தெரிய வந்தது. போலீசார், காருடன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து செம்மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார், கார் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்