மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

Update: 2023-05-15 18:45 GMT

சாயல்குடி,

சாயல்குடி பகுதியில் மணல் கடத்தல் நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்ததன் பேரில் சாயல்குடி சப்-இன்ஸ்பெக்டர் சல்மோன், தலைமை காவலர் கோதண்டராமன் மற்றும் போலீசார் மலட்டாறு ஆற்றுப் படுகையில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அதில் திருட்டுத்தனமாக மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது. டிராக்டர் டிரைவர் எம்.கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஞானவேல்(வயது 40) மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ததுடன் மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்