ரூ.50 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

கீழ்வேளூர் அருகே ரூ.50 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-04-28 18:45 GMT

சிக்கல்:

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே ஆழியூர் ஊராட்சி பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கீழ்வேளூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் ஆழியூர் பள்ளிவாசலுக்கு எதிரே உள்ள மளிகை கடை ஒன்றில் சோதனை நடத்தினர். இதில் அந்த மளிகை கடையில் விற்பனைக்காக குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் 375 பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதை தொடர்ந்து புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மளிகை கடை நடத்தி வந்த புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி போத்தையன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த அஜிவாத் மகன்கள் ராஜா முகமது(40), நைனா முகமது (வயது 34) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்