ஓமலூர் அருகே குடோனில் பதுக்கிய ரேஷன் அரிசி பறிமுதல்-வாலிபர் கைது

ஓமலூர் அருகே குடோனில் பதுக்கிய ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-15 22:42 GMT

சேலம்:

ஓமலூர் அருகே ஆட்டுக்காரனூர் கிராமத்தில் முத்துகுமரேசன் என்பவரின் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக சேலம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று சம்பந்தப்பட்ட நபருக்கு சொந்தமான குடோனில் சோதனை செய்தபோது, அங்கு 190 மூட்டைகளில் 9,500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ரேஷன் அரிசிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து ரேஷன் அரிசியை கடத்தியதாக சேலம் கிச்சிப்பாளையம் சிதம்பரம் பிள்ளைகாடு பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 27) என்பவரை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சேலம் மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதை பதுக்கி கர்நாடகா மாநிலத்திற்கு கடத்தி கொண்டு சென்று விற்பனை செய்ய வைத்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்