விழுப்புரம் நகரில் உள்ள கடைகளில்580 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

விழுப்புரம் நகரில் உள்ள கடைகளில் 580 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-07-03 18:45 GMT

விழுப்புரம் நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் நகராட்சி சுகாதார அலுவலர் கபீர் தலைமையிலான அலுவலர்கள் நேற்று மாலை விழுப்புரம் நகரில் உள்ள பல்வேறு கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு 580 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் 5 கடைகளுக்கு மொத்தம் ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்