பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
ஆரணியில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.;
ஆரணி
கலெக்டர் முருகேஷ் உத்தரவின்படி ஆரணி நகராட்சி ஆணையாளர் பி.தமிழ்ச்செல்வி மேற்பார்வையில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் சுகாதார தனி அலுவலர் மோகனசுந்தரம் மற்றும் ஊழியர்கள் ஆரணி நகரில் காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு, பழைய, புதிய பஸ் நிலைய பகுதிகளில் உள்ள சுமார் 65 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கடைகளில் தடை செய்யப்பட்ட 250 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் ரூ.5 ஆயிரம் அபாரதம் வசூலித்தனர்.