பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் கடைகளில் வைத்திருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-07-18 19:30 GMT

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பதை தடுக்க, சுகாதார ஆய்வாளர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் நேற்று திண்டுக்கல் பஸ் நிலையம், சாலை ரோடு பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளர், பாலித்தீன் பைகள் விற்கும் கடைகள், துணிக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் உள்பட அனைத்து விதமான கடைகளிலும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது 12 கடைகளில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளர்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதற்கு வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். ஒருசில கடைகளில் சாக்குப்பைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து 250 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அது தொடர்பாக 12 கடைகாரர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்