கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஷ்யாம் கர்னல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறையை சேர்ந்த சுற்றுச்சூழல் துணை பொறியாளர் அகல்யா உள்ளிட்ட நகராட்சி குழுவினர், கடைவீதி பகுதிகளில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள், கடை வீதியில் உள்ள கடைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஒரு கடைக்கு ஆயிரம் ரூபாயும், மற்றொரு கடைக்கு ரூ.500-ம் என அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.