அதிக பாரம் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
நெல்லை அருகே அதிக பாரம் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லை அருகே தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மேலப்பாட்டம் விலக்கு பகுதியில் எம்.சாண்ட் ஏற்றி வந்த லாரியை மறித்து டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அளவுக்கு அதிகமாக லாரியில் பாரம் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் லாரி டிரைவரான சிவந்திபட்டி முத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த மாடசாமி (வயது 39) மீது வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.