கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்

கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-10-29 19:21 GMT

மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மட்டபாறை பட்டி அருகே வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட முயன்ற போது போலீசாரை பார்த்ததும் லாரி டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். லாரியை போலீசார் சோதனையிட்டதில் அப்பகுதியில் உள்ள குளத்தில் கிராவல் மண் அள்ளி கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்