கிராவல் மண் அள்ளிய லாரி பறிமுதல்

தேவதானப்பட்டி அருகே கிராவல் மண் அள்ளிய லாரி பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2022-11-13 18:45 GMT

தேனி மாவட்ட புவியியல் மற்றும் சுங்கத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமோகன் தலைமையிலான அதிகாரிகள் கனிம வள கடத்தல் தொடர்பாக வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஜெயமங்கலம் வைகை அணை சாலையில் தனியார் காப்பி ஆலை அருகே சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியை மறித்து சோதனை செய்தனர். அதில் கிராவல் மண் அள்ளி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதற்கான அனுமதி சீட்டை கேட்டபோது டிரைவர் தப்பி ஓடி விட்டார். பின்னர் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஜெயமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி உரிமையாளர் மற்றும் டிரைவரை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்