அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்

தளவாய்புரத்தில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2022-06-10 19:28 GMT

ராஜபாளையம்,

தளவாய்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசன் மற்றும் போலீசார் புத்தூர் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் மருத்துவனேரி கண்மாயில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்ததும், முகவூரை சேர்ந்த டிரைவர் ஆறுமுகம் (வயது35) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து டிராக்டருடன் மணலை பறிமுதல் செய்த போலீசார், ஆறுமுகத்தை கைது ெசய்தனர். இதுகுறித்து தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்