வீட்டில் பதுக்கிய 110 கிலோ குட்கா பறிமுதல்
வீட்டில் பதுக்கிய 110 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையத்தை அடுத்த மொளசி அக்கம்மாபாளையத்தை சேர்ந்தவர் லோகு (வயது 35). இவருடைய வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்து வருவதாக மொளசி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அவருடைய வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 110 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லோகுவை தேடி வருகின்றனர்.