கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-10-13 10:29 GMT

திருப்பூர்

திருப்பூர் தாராபுரம் ரோடு-காங்கேயம் கிராஸ் ரோடு சந்திப்பு பகுதியில் கருப்பராயன் கோவில் உள்ளது. இந்த கோவில் முன்பாக செல்லும் கழிவு நீர் கால்வாய் சரியான பராமரிப்பின்றி விடப்பட்டுள்ளது. இதனால் இந்த கால்வாய் முழுவதும் குப்பை நிரம்பி வழிகின்றது. பெரும்பாலான நாட்களில் கால்வாய் மண் மூடி காணப்படுவதால் லேசான மழை பெய்யும் நேரத்திலும் இங்கு ரோட்டில் மழை வெள்ளம் குளம் போல் தேங்கி விடுகின்றது. நேற்று முன்தினம் இரவு மழை பெய்த நிலையில், நேற்று காலை வரைக்கும் இந்த ரோட்டில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகவும் சிரமப்பட்டனர். தற்போது மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் இதுபோன்ற கால்வாய்களை முறையாக பராமரிக்காமல் இருந்தால் வெள்ள பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த கழிவு நீர் கால்வாயில் உள்ள குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்தி, கால்வாயை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்