திருமாவளவனின் கருத்துக்கு சீமான் ஆதரவு

விஜய் நடத்தும் மாநாட்டின் இட உரிமையாளர்களை மிரட்டுவதுதான் ஜனநாயகமா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2024-08-14 10:55 GMT

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தலித்கள் இனி முதல்-அமைச்சராக முடியாது எனக் கூறிய திருமாவளவனின் கருத்தை நான் ஏற்கிறேன். அதேசமயம் திமுக அரசு மீது எனக்கு நம்பிக்கை இருக்என்று அவர் கூறியதை நான் எதிர்க்கிறேன். துணை முதல்-அமைச்சராக ஆதிதமிழ் குடியை கொண்டு வரமுடியாதா? கல்வி அமைச்சராக ஆதிதிராவிடரை நியமித்தால் படிப்பு ஏறாதா? ஆதிதிராவிடர்களுக்கு ஆதிதிராவிட நலத்துறையை தவிர வேறெந்தத் துறையை கொடுத்துள்ளனர்? உங்க வீட்டுக்குள் இருந்துதான் துணை முதல்-அமைச்சர் வர வேண்டுமா? நாட்டுக்குள்ளே இருந்து வேறு யாரும் வரக்கூடாதா?.

ஒரு தடவை எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். நாங்கள் என்ன செய்கிறோம் என்று பாருங்கள். ஆதிதமிழ் குடிகளை மதிப்பதற்குப் பதிலாக மிதிக்கும் கொடுமை இப்போது நடந்து வருகிறது. இதை சட்டம், திட்டத்தால் மாற்ற முடியாது. உளவியல் ரீதியாக மாற வேண்டும். விஜய் நடத்தும் மாநாட்டின் இட உரிமையாளர்களை மிரட்டுவதுதான் ஜனநாயகமா?; இது சர்வாதிகாரம் என்றுகூட சொல்ல முடியாது, கொடுங்கோன்மை என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்