இளையான்குடி,
இளையான்குடியில் புதூர் பகுதியான சேதுகுடி வருவாய் கிராமம் கண்மாய் கரை பகுதியில் தமிழக அரசின் பசுமை தமிழகம் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியினை மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேலு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.
இதில், இளையான்குடி தாசில்தார் அசோக்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத், துணை தாசில்தார் முத்துவேல், சமூக ஆர்வலர் அப்துல் மாலிக், பேரூராட்சி கவுன்சிலர், புதூர் ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர். இப்பகுதியில் 200 மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் அப்துல் மாலிக் தெரிவித்தார்.