கோடை நடவுக்கு நாற்று பறிக்கும் பணி

நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதிகளில் கோடை நடவுக்கு நாற்று பறிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2023-03-27 18:45 GMT

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதிகளில் கோடை நடவுக்கு நாற்று பறிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சாகுபடி

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் கோட்டப்பகுதிகளில் சுமார் 43 ஆயிரத்து 250 ஏக்கரில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த சம்பா மற்றும் தாளடி அறுவடைபணிகள் முடியும் தருவாயில் உள்ளது. முன் கூட்டியே நிலத்தடி நீரை பயன்படுத்தி குறுவை மற்றும் தாளடி சாகுபடி செய்து அறுவடையை முடித்தனர்.

நாற்று பறிக்கும் பணி

அதன் பிறகு நிலத்தடி நீரை பயன் படுத்தி நீடாமங்கலம் வேளாண் கோட்ட ்பகுதிகளில் சித்தமல்லி, பரப்பனாமேடு, மேலபூவனூர், காளாச்சேரி, ஆதனூர், ராயபுரம், காளாஞ்சிமேடு, ராஜப்பையன்சாவடி, பெரம்பூர், அனுமந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 17 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் தற்போது கோடை நடவு பணிக்கு நாற்று பறிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்