முத்துகாப்பட்டி ஊராட்சியில் மரபு வகை விதைகள் நடும் நிகழ்ச்சி

முத்துகாப்பட்டி ஊராட்சியில் மரபு வகை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-06-05 16:56 GMT

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் அருகே உள்ள முத்துகாப்பட்டி ஊராட்சி புதுக்கோம்பையில் 8 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் மரபு வகை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் அருள் ராஜேஸ் தலைமை தாங்கி, மரபு வகை விதைகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் அமெரிக்கவாழ் தமிழரான முத்துகாப்பட்டி செல்வம், செல்வி செல்வம், நபார்டு வங்கி நிதி சேவை அலுவலர் பூங்கொடி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வருதராஜ், வக்கீல் இளவரசு, தொழில் அதிபர் கவுசிக் பிரபு, மாவட்ட பசுமை இயக்க செயலாளர் தில்லை சிவக்குமார் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பொதுமக்களுடன் கலந்துரையாடும் கூட்டம் நடந்தது. இதில் மரபு வகை விதைகள் பயன்பாடு, நோக்கம் குறித்து விளக்கி கூறப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்