மதசார்பற்ற ஜனதாதளம் ஆர்ப்பாட்டம்
தக்கலையில் மதசார்பற்ற ஜனதாதளம் ஆர்ப்பாட்டம்
தக்கலை,
பத்மநாபபுரம் நகராட்சியில் சொத்துவரி உயர்வை கண்டித்து நகர மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் அதிகாரிகளோடு நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்திற்கு நகர தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் முகமது ரஷீது, கவுன்சிலர்கள் மும்தாஜ், சபீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் அருள்ராஜ் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் மாவட்ட இளைஞரணி தலைவர் ஜாண் கிறிஸ்டோபர், நிர்வாகிகள் ராஜசேகர், ஜாண்பிரிட்டோ, ஹாஜாமைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.