மோட்டார் சைக்கிள் மோதி கூட்டுறவு சங்க செயலாளர் பலி

மேலகிருஷ்ணன்புதூரில் மோட்டார் சைக்கிள் மோதி கூட்டுறவு சங்க செயலாளர் பரிதாபமாக பலியானார்.

Update: 2023-07-10 18:45 GMT

மேலகிருஷ்ணன்புதூர்:

மேலகிருஷ்ணன்புதூரில் மோட்டார் சைக்கிள் மோதி கூட்டுறவு சங்க செயலாளர் பரிதாபமாக பலியானார்.

கூட்டுறவு சங்க செயலாளர்

மேலகிருஷ்ணன்புதூர் அருகே உள்ள கீழகிருஷ்ணன்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 63), ஓய்வு பெற்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர். இந்தநிலையில், இவர் நேற்று முன்தினம் மாலை மேலகிருஷ்ணன்புதூர் ஜங்ஷனுக்கு சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க சென்றார். பின்னர் பொருட்கள் வாங்கிவிட்டு மீண்டும் வீடு நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக ராஜேந்திரன் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் கீழே விழுந்து காயமடைந்தனர்.

பலி

உடனே அப்பகுதியினர் அவர்களை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இதுகுறித்து ராஜேந்திரனின் மனைவி விஜயலெட்சுமி சுசீந்திரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த சமையல் தொழிலாளி அர்ஜூன் (27) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்