குடியாத்தத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

குடியாத்தத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-07-14 17:51 GMT

குடியாத்தம்

குடியாத்தத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நகர தலைவர் பி.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஆர்.பாபு, கே.சங்கர், ஆர்.மரியனாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போதை பொருட்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்த சேலம் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் செயலாளர் பெரியசாமி தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யக்கோரி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் பி.திலீபன் துவக்க உரையாற்றினார். நகரகுழு செயலாளர் எஸ்.வாசுதேவன் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட பொருளாளர் எஸ்.சிலம்பரசன், மாவட்ட பொருளாளர் எஸ்.கோட்டீஸ்வரன், மாவட்ட துணைத்தலைவர் சூர்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கே.சாமிநாதன், குணசேகரன், சரவணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செயலாளர் எஸ்.பார்த்திபன் நிறைவு உரையாற்றினார். முடிவில் எம்.ராஜா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்