இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம்

இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-06-13 20:26 GMT


தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் விருதுநகர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர் முத்துக்குமார் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். 6,7,8-ம் வகுப்புகளுக்கு கற்பித்து வரும் இடைநிலை ஆசிரியர்களின் பணியிடங்களை நிர்ணயம் செய்து விட்டு அதன் பின்னர் பட்டதாரி ஆசிரியர்களை மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் உபரி பணியிடங்களை கண்டறிந்து பணி நிரவல் செய்ய வேண்டும். மூத்தோரான இடைநிலை ஆசிரியர்களை முதலில் பணி நிரவல் செய்யும் நடைமுறையை கைவிட வேண்டும் என போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்