நத்தம் பகுதியில் இலந்தை பழ சீசன் தொடக்கம்

நத்தம் பகுதியில் இலந்தை பழ சீசன் தொடங்கியுள்ளது.

Update: 2023-01-23 16:47 GMT

நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மா, பலா, வாழை, கொய்யா, பப்பாளி, சப்போட்டா, நாவல், மற்றும் சீத்தா உள்ளிட்ட பல்வேறு பழ வகைகள் ஆங்காங்கே சாகுபடி செய்யப்பட்டு, அந்தந்த காலகட்டங்களில் அறுவடை செய்யப்படுகிறது. இந்தநிலையில் தற்போது இலந்தை பழ அறுவடை சீசன் தொடங்கியுள்ளது. இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய 3 சுவைகள் நிறைந்த இலந்தை பழத்தை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் வாங்கி சாப்பிடுவார்கள்.

இதையொட்டி அறுவடை செய்யப்பட்ட இலந்தை பழங்கள் மார்க்கெட்டுகளில் விற்பனைக்காக குவிந்துள்ளது. குறிப்பாக நத்தம் பஸ் நிலையம் மற்றும் மார்க்கெட்டில் வியாபாரிகள் இலந்தை பழத்தை விற்பனை செய்து வருகின்றனர். ஒரு கிலோ இலந்தை பழம் ரூ.50 முதல் ரூ.60 வரை விற்கப்படுகிறது. ஆண்டிற்கு ஒருமுறை மட்டும் மகசூல் தரும் இலந்தை பழம் மருத்துவ குணமிக்கது என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற ஏப்ரல் மாதம் வரை இலந்தை பழ சீசன் இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்