கொல்லிமலையில் குளு, குளு சீசன்

கொல்லிமலையில் குளு, குளு சீசன் நிலவி வருகிறது.

Update: 2022-08-09 12:52 GMT

சேந்தமங்கலம்:

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம் அருவி, மாசிலா அருவி ஆகியவற்றில் தண்ணீர் கொட்டுகிறது. இவற்றில் குளித்து மகிழ கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் படையெடுத்து வருகின்றனர்.

இதனிடையே கொல்லிமலையில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. காலை பொழுதில் எதிரே சாலை தெரியாத அளவுக்கு பனிமூட்டம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு செல்கின்றனர். கொல்லிமலையில் தற்போது குளு, குளு சீசன் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

மேலும் செய்திகள்