பெரிய குளத்தை பார்வையிட்ட சீமான்
வடக்கு விஜயநாராயணம் பெரிய குளத்தை சீமான் பார்வையிட்டார்.
இட்டமொழி:
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நேற்று மாலை வடக்கு விஜயநாராயணத்தில் உள்ள பெரிய குளத்தை நேரில் பார்வையிட்டார். அப்போது அங்கு திரண்டிருந்த ஊர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் கூறுகையில், "நெல்லை மாவட்டத்திலேயே பெரிய குளமாக கருதப்படும் வடக்கு விஜயநாராயணம் பெரியகுளம் ஒரு அணைக்கட்டு அமைக்கும் தரத்துடன் காணப்படுகிறது. அது ஒரு அணைக்கட்டு அளவுக்கு தரம் உயர்த்தப்பட நான் குரல் கொடுப்பேன். இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்" என்றார்.