சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும்காங்கிரஸ் கட்சியினர் போலீசில் புகார்
சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் போலீசில் புகார் அளித்தனா்
காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் ஜவகர்அலி தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:-
மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது அவர் முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் அவதூறாக பேசி உள்ளார். தமிழகத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், மத கலவரத்தை தூண்டும் வகையிலும் அவர் பேசி உள்ளார். எனவே சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
மனு கொடுக்கும்போது நிர்வாகிகள் திருச்செல்வம், ராஜேஸ் ராஜப்பா, விஜயபாஸ்கர், ஜூபைர் அகமது, பாஷா உள்பட பலர் உடனிருந்தனர்.