பட்டாசு ஆலைகளுக்கு சீல்
உரிமம் புதுப்பிக்காத பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் அனுமதியின்றி செயல்படும் பட்டாசு ஆலைகள் குறித்து கணக்கெடுக்க மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டிருந்தார். அதன்படி ராஜபாளையம் வருவாய் துறையினர் நடத்திய ஆய்வில் ராஜபாளையம் அருகே தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையிலான வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கடந்த டிசம்பர் மாதம் உரிமம் முடிவடைந்ததை புதுப்பிக்காமல் 2 ஆலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விதி மீறலில் ஈடுபட்டதாக ஆலையின் வெடிபொருள் அறைகளை பூட்டி வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.