போதைப்பொருள் விற்ற கடைக்கு சீல் வைப்பு

பாளையங்கோட்டையில் போதைப்பொருள் விற்ற கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Update: 2022-06-14 20:28 GMT

நெல்லை:

நெல்லை மாநகர கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் பொறுப்பேற்ற நிலையில், மாநகர பகுதிகளில் தடைசெய்யப்பட்ட கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில் போலீஸ் அதிகாரிகள் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து நெல்லை பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது நெல்லை திருச்செந்தூர் சாலையில் உள்ள ஒரு கடையில் சுமார் 1¾ கிலோ குட்கா மற்றும் பான்மசாலா பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட 10 கிலோவுக்கும் மேலான பிளாஸ்டிக் பொருட்களும் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளை வரவழைத்து, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அவர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் அந்த கடை உரிமையாளர் சண்முகசுந்தரம் என்பவருக்கு ரூ.16 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் உத்தரவின் பேரில் அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.




Tags:    

மேலும் செய்திகள்