கடைக்கு 'சீல்'
கபிஸ்தலம் அருகே அனுமதியின்றி நாட்டு வெடிகள் தயாரித்த கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
கபிஸ்தலம் அருகே அனுமதியின்றி நாட்டு வெடிகள் தயாரித்த கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
வெடிக்கடையில் சோதனை
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள சோழங்கநத்தம் வடக்குத் தெருவை சேர்ந்த நெப்போலியன். இவர் ஓலைப்பாடி ஊராட்சி எருமைப்பட்டி கிராமத்தில் வெடிக்கடை நடத்த உரிமம் பெற்று நடத்தி வருகிறார். இந்த கடையில் வெடிப்பொருட்கள் உற்பத்தி செய்ய உரிமம் பெறாமல் நாட்டு வெடிகளை தயாரித்ததாக புகார் வந்தது.
இதையடுத்து கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா உத்தரவின் பேரில் பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, வருவாய் ஆய்வாளர் ராஜதேவி, கிராம நிர்வாக அலுவலர் பிரிதிவிராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று வெடிக்கடையில் சோதனை மேற்கொண்டனர்.
கடைக்கு 'சீல்'
அப்போது அங்கு அனுமதியின்றி நாட்டுவெடிகள் தயாரித்ததும், நாட்டு வெடி தயாரிக்க மூலப்பொருட்கள் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்து ½ கிலோ வெடிமருந்து, வெடி தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடைக்கு 'சீல்' வைத்தனர். தலைமறைவாக உள்ள கடை உரிமையாளர் நெப்போலியனை கபிஸ்தலம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.