கல்குவாரியில் இருந்து கல் ஏற்றி சென்ற லாரிக்கு சீல்

கல்குவாரியில் இருந்து கல் ஏற்றி சென்ற லாரிக்கு சீல் வைக்கப்பட்டது.

Update: 2023-02-24 18:01 GMT

அணைக்கட்டு

கல்குவாரியில் இருந்து கல் ஏற்றி சென்ற லாரிக்கு சீல் வைக்கப்பட்டது.

அணைக்கட்டு தாலுகா கரடிகுடி பகுதியில் ஏழை ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கிய நிலத்தில் கல்குவாரி செயல்பட்டு வருவதாகவும், இந்த கல்குவாரியில் இருந்து கற்களை பிரித்து எடுக்கும் போது ஏற்படும் அதிக வெடி சத்தத்தால் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் விரிசல் ஈடுபடுவதாகவும் கரடிகுடி ஊராட்சி மன்ற தலைவருக்கு பொதுமக்கள் புகார் கொடுத்தனர். அதன் பேரில் நேற்று கல்குவாரிக்குச் சென்ற கரடிகுடி ஊராட்சி மன்ற தலைவர் கிரி கல்குவாரி உரிமையாளரிடம் ஏழைகளுக்கு வழங்கிய நிலத்தில் கல்குவாரி அமைத்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும், அதற்கு உண்டான அனுமதி கடிதத்தைக் கேட்டார். அதற்கு அனுமதி கடிதம் இல்லை என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கருங்கற்களை ஏற்றி செல்வதற்கு தயாராக இருந்த லாரிகளை சிறைபிடித்து அணைக்கட்டு தாசில்தாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் தாசில்தார் ரமேஷ், துணை தாசில்தார் ராமலிங்கம் ஆகியோர் சென்று குவாரியை ஆய்வு செய்தனர். அப்போது ஆதிதிராவிடர்களுக்கு வழங்கிய நிலத்தில் அனுமதி இன்றி கல்குவாரி நடத்துவது தெரியவந்தது. இதனையடுத்து கருங்கல் ஏற்றிச் செல்ல தயாராக இருந்த ஒரு லாரிக்கு மட்டுமா தாசில்தார் சீல் வைத்தார். இதுகுறித்து உயரதிகாரிளுக்கு தெரிவிப்பதாகவும் தாசில்தார் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்