பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்துக்கு 'சீல்'

கூடலூரில் தடையை மீறி திறக்கப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

Update: 2022-10-19 18:45 GMT

கூடலூர், 

நாடு முழுவதும் செயல்பட்டு வந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு தடை செய்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு இடங்களிலும் செயல்பட்டு வந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மூடப்பட்டன. இந்தநிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் தடையை மீறி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகம் செயல்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து ஆர்.டி.ஓ. சரவண கண்ணன், தாசில்தார் சித்தராஜ், போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார், இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார், வருவாய்த்துறையினர் நேற்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். அப்போது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகம் செயல்பாட்டில் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் அந்த அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். மேலும் அதற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்