கோவிலுக்கு வாடகை பாக்கி செலுத்தாத வீடுகளுக்கு 'சீல்'

திண்டுக்கல்லில், கோவிலுக்கு வாடகை பாக்கி செலுத்தாத வீடுகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Update: 2022-06-14 17:03 GMT

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில், திண்டுக்கல் கவாடக்காரத்தெரு நாலு ஜாதி காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 11 வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த வீடுகளில் வசித்து வந்த 4 வாடகைதாரர்கள், பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் லட்சக்கணக்கான பணத்தை பாக்கியாக வைத்திருந்தனர். இதையொட்டி இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் இணை ஆணையர் பாரதி வாடகை பாக்கி செலுத்தாத 4 வீடுகளையும் பூட்டி 'சீல்' வைக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில் நேற்று அந்த வீடுகள் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டன. இந்த நடவடிக்கையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுரேஷ் தலைமையில் ஆய்வாளர் சந்திரமோகன், அபிராமி அம்மன் கோவில் தக்கார் விசுவநாத், திண்டுக்கல் கிழக்கு வருவாய் ஆய்வாளர் அழகுமலை, அடியனூத்து கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார் ஆகியோர் ஈடுபட்டனர். மேலும் போலீசார், தீயணைப்பு மற்றும் வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்